செய்திகள்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்: ஆர்.டி.ஐ. தகவல்

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக ஆர்.டி.ஐ. தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை மலர்

ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் பெற்றுள்ளார்.

அவருக்கு தகவல் ஆணையம் அனுப்பிய விளக்கத்தில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு முன்பாக இதுதொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னதாக அவருக்கு தவறான மருந்துகள் தரப்பட்டதாக கூறுவது அவதுறான தகவல். ஜெயலலிதாவின் மருத்துவச் செலவுக்காக அரசு சார்பில் பணம் எதுவும் செலவிடப்படவில்லை’ என்றும் ஆர்டிஐ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.