காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்.
25-வது நாளாக அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இன்று தங்க சரிகை பதியப்பட்ட மஞ்சள் பட்டு உடுத்தி மல்லிகை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்பட்டு அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். சாரல் மழை பெய்த நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று அத்திவரதர் உற்சவத்தில் நடிகர் பிரபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பக்தர்களின் வசதிக்காக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், காஞ்சீபுரம் வந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார்.