கோப்பு படம் 
செய்திகள்

தேனாம்பேட்டையில் ரூ.10 லட்சம் கிரெடிட் கார்டு மோசடி

தேனாம்பேட்டையில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை கெருக்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சலா ரூபெர்ட், இவர் தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டூடியோ நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். அப்போது தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி நிறுவனத்தின் உரிமையாளர் ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார்.

இதுபற்றி தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT