பணம் கொள்ளை 
செய்திகள்

ராமநாதபுரத்தில் இரும்பு கடையில் ரூ.1 லட்சம் கொள்ளை

ராமநாதபுரத்தில் இரும்பு கடையில் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கேணிக்கரையில் இரும்பு கடை வைத்திருப்பவர் சலிமுல்லா கான். இவர் த.ம.மு.க. மாநிலச் செயலாளராக உள்ளார். இவரது கடைக்குள் இரவில் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த கேமராவை அகற்றியுள்ளனர். பின்னர் பணப்பெட்டியை உடைத்து ஒரு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்தப்பகுதியில் நடைபெற்று இருக்கும் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கடையின் உரிமையாளர் சலிமுல்லா கான் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.