செய்திகள்

ஜி.எஸ்.டி வரி மூலம் ஒரே மாதத்தில் 92 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - அருண் ஜெட்லி

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையாக கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி.யால் ஒரு மாதத்தில் மட்டும் 92 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளதாக மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கடந்த ஜூலை மாதம் முதல் தேதி அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி அமல்படுத்திய பிறகு நாடு முழுவதும் 87 லட்சம் ஜி.எஸ்.டி இணையத்தில் பதிவுசெய்துள்ளதாக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது, “ஜி.எஸ்.டி வரியின் கீழ் 91 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், 92 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.

மேலும், “ஆகஸ்ட் 25-ம் தேதி வரை 59.57 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வரி செலுத்தியோரின் எண்ணிக்கை 38 புள்ளி 38 லட்சத்தில் இருந்து 59 புள்ளி 57 லட்சமாக உயர்ந்துள்ளது. வருமான வரி செலுத்த ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 72.33 லட்சம் பேர் உள்ளனர். ஜூலை மாதம் மட்டும் சுமார் 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.” என கூறியுள்ளார்.