பணம் மோசடி 
செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி: கணவன்-மனைவி தலைமறைவு

தண்டையார்பேட்டையில் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி தலைமறைவான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராயபுரம்:

தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பொதுடில்லி வெங்கடேசுவரன். இவரது மனைவி பொது அருணாஜோதி. இவர்கள் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது உறவினரின் ரெயில்வே வேலைக்காக இவர்களிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.9 லட்சம் கொடுத்தார்.

ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களது நிறுவன மேலாளர் பாபுஷியாம் என்பவரும் மாயமாகிவிட்டார். இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.