ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கொண்டு வந்த பையில் இரண்டு ஸ்பிக்கர்கள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.
அதில் 200 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சுரேஷிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport