செய்திகள்

காசிமேட்டில் வீட்டில் ரூ.5 லட்சம் செம்மரக்கட்டை பதுக்கல்

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராயபுரம்:

காசிமேடு சூரிய நாராயண தெருவை சேர்ந்தவர் மீரான் (30). இவர் பிரேமா என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். வாடகை தொடர்பாக இவர்களுக்கிடையே கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. அதில் மீரான் வீட்டை காலிசெய்யும் படி கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் அவர் வெளியேறாமல் காலம் கடத்தி வந்தார்.

எனவே வீட்டை காலி செய்து கொடுக்க கோர்ட்டு ஊழியர்கள் வந்து இருந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. எனவே அங்கிருந்த 80 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம்.

இதற்கிடையே மீரான் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மீரானுக்கும் செம்மரக்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர். #Tamilnews