செய்திகள்

கோவிலில் பலியான அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பலியான அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy #ADMK

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம், ஆஞ்சநேயர் கோயிலில், 27.1.2019 அன்று கைங்கர்யப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை பிரதான சாலையைச் சேர்ந்த வெங்கடேசன் கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

கைங்கர்யப்பணியின் போது, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.