செய்திகள்

மும்பையில் ரூ.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 3 பேர் கைது

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூ.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். #demonetisednotes

மாலை மலர்

மும்பை:

மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பழைய ரூபாய் நோட்டுகளுடன் சில தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுமார் 4.93 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்துடன் தங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் எனவும், பணத்தை பரிமாற்றம் செய்யவே இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு செய்தது முதல் சட்ட விரோதமாக பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. #demonetisednotes