மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் 
செய்திகள்

கொரோனா வைரசுக்கு பலியாகும் உணவு கழக தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் ஆயுள் காப்பீட்டு வசதி

கொரோனாவுக்கு பலியாகும் இந்திய உணவு கழக தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டு வசதி அளிக்கப்படும் என மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

புதுடெல்லி:

கொரோனா வைரசுக்கு பலியாகும் இந்திய உணவு கழக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.35 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டு வசதி அளிக்கப்படுகிறது. மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இதை அறிவித்தார்.

80 ஆயிரம் தொழிலாளர்கள், 20 ஆயிரம் அதிகாரிகள் ஆகியோருக்கு இத்திட்டம் பொருந்தும். ஊரடங்கு அமலுக்கு வந்த நாளில் இருந்து 6 மாதங்கள் பணியாற்றிய பிறகு, கொரோனா வைரசால் மரணம் அடைபவர்களுக்கு காப்பீட்டு வசதி அளிக்கப்படுவதாக ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

SCROLL FOR NEXT