செய்திகள்

திருவொற்றியூரில் அரிசி கடையில் ரூ.25 ஆயிரம் கொள்ளை

திருவொற்றியூரில் அரிசி கடையில் ரூ.25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர், மார்க்கெட் பகுதியில் அரிசி கடை நடத்தி வருபவர் காமாட்சி. திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சங்க செயலாளராக உள்ளார்.

நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் அரிசி கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறந்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை காணவில்லை.

மேலும் சுவற்றில் இருந்த வெப்பக்காற்றை வெளியேற்ற பொருத்தி இருந்த விசிறி கழற்றப்பட்டு இருந்தது. அதன் துளை வழியாக புகுந்த மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

பின்புறமாக உள்ள மரக்கடை வழியாக வந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

இதேபோல் நேற்று இரவு திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள நகை கடையில் வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி 6 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews

SCROLL FOR NEXT