திருச்சி விமான நிலையம் 
செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கே.கே.நகர்:

திருச்சிக்கு இன்று அதிகாலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இளையான் குடியைச் சேர்ந்த யாசர் செரிப் (வயது 23) என்பவர் தான் கொண்டு வந்த லேப்டாப்பில் தங்க சங்கிலி மற்றும் பேப்பர் வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட தங்கத்தின் எடை 516 கிராம். மொத்த மதிப்பு ரூ.19 .77 லட்சம் ஆகும். கடந்த ஒரு மாத காலமாக திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பிடிபடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

SCROLL FOR NEXT