செய்திகள்

மீஞ்சூர் அருகே ரூ.10 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின: போலீசார் விசாரணை பறிமுதல்

மீஞ்சூர் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள 20 டன் செம்மரக்கட்டைகள் சிக்கின. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீஞ்சூர்:

மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில் கப்பல் கட்டும் தளம், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, துறைமுகம் உள்ளது.

இந்த துறைமுகத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த கன்டெய்னரின் ஒரு பெட்டியில் 20 டன் அளவுக்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவற்றை கொண்டு வந்து பதுக்கியது யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT