செய்திகள்

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் - கேத் தம்பதிக்கு ஆண் குழந்தை

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. #KateMiddleton

லண்டன்:

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்பமாக இருந்த கேத் மிடில்டன் பிரசவத்திற்காக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கேத் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. தாய் மற்றும் குழந்தை நலமாக இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RoyalFamily #TamilNews

SCROLL FOR NEXT