கைது 
செய்திகள்

திருச்சியில் குண்டர் சட்டத்தில் ரவுடிகள் கைது

திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

திருச்சி

திருச்சி உறையூர் நாச்சியார்கோட்டையை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 29). இவர் உறையூர் சாலைரோட்டில் தள்ளு வண்டியில் பிரியாணி வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த கவுரி சங்கர் (30) என்பவர், சிலம்பரசன் கடைக்கு சென்று அவரிடம் தகராறு செய்து ரூ.4 ஆயிரத்தை பறித்ததோடு, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பிரியாணியை தேசப்படுத்தியுள்ளார். 

இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் விசாரணை நடத்தி கவுரி சங்கரை கைது செய்தனர். 

இதேப்போல் திருச்சி வெங்கங்குடி மெயின்ரோடு மனோ கோல்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (34). சம்பவத்தன்று இவர்  திருவானைக்காவல் பகுதியில் நிற்கும் போது அவரிடம்  ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஜே.ஜே.நகரை சேர்ந்த சத்தியகிரி(25) என்பவர் தகராறு செய்து அரிவாளால் சரவணனை வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில்  ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி  சத்தியகிரியை கைது செய்தனர். 

இந்த நிலையில் கைதான கவுரிசங்கர், சத்தியகிரி மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரிந்துரை செய்தனர். அவர் உத்தரவிட்டதையடுத்து 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.