இளநீர் சங்கர் 
செய்திகள்

அயனாவரம் ரவுடி என்கவுண்டர் வழக்கு- ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி சம்மன்

அயனாவரம் ரவுடி சங்கரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மாலை மலர்

அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 21ந்தேதி ரவுடி சங்கரை பிடிக்க முயன்றபோது, அவர் காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் ஆய்வாளர் நடராஜன் சுட்டுக்கொன்றார். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ரவுடியை என்கவுண்டர் செய்த விவகாரத்தில் தொடர்புடைய 4 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரைத்த நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் ரவுடி சங்கரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஆய்வாளர் நடராஜன், கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 6 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 7ஆம் தேதி எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.