செய்திகள்

கத்தியால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி பினு கைது

கத்தியால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி பினுவை தனிப்படை போலீசார் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

சென்னை அருகே உள்ள மாங்காடு பகுதியில் தனது பிறந்தநாளில் கத்தியால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரவுடி பினு. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் இவர் கேரளாவில் இருந்து புழல் அருகே உள்ள வீட்டுக்கு வருவதாக நேற்று தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு சுற்றி வளைத்து ரவுடி பினுவை கைது செய்தனர்.