கைது 
செய்திகள்

தஞ்சையில் வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு - ரவுடி கைது

தஞ்சையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், அவர் ரவுடி என்பதும் தெரியவந்தது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை சிராஜூதின் நகரை சேர்ந்தவர் ஹக்கீம் இப்ராகிம்(வயது25).

சம்பவத்தன்று இவர் அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த பூக்கார தெற்கு தெருவை சேர்ந்த சரவணன்(34) என்பவர் ஹக்கீம் இப்ராஹீமை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரவணன், ஹக்கிம் இப்ராகிமின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். விசாரணையில் சரவணன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், அவர் ரவுடி என்பதும் தெரியவந்தது.