செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: பழனியில் நாளை ரோப்கார் நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தப்படும் ரோப் கார் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை நிறுத்தப்படுகிறது.

மாலை மலர்

பழனி:

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடிவாரம் பகுதியில் இருந்து கோவிலுக்கு விரைவாக அழைத்துச்செல்வது ரோப் கார் ஆகும். இதனால் பழனிக்கு வரும் பக்தர்களின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை விளங்குகிறது. பக்தர்கள் பாதுகாப்புக்காக ரோப் காரில் தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி ரோப்காரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.