செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிராக மீண்டும் சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தல்

ஐ.சி.சி. தொடரில் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தியுள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பையில் சதம் அடித்துள்ளார்.

இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 111 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வங்காள தேசத்திற்கு எதிராக சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.