செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் - குண்டுவெடிப்பில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Afghanistan #TalibanAttack

காபுல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று இரண்டாம் நாள் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கிழக்கு நங்கர்கார் மாகாணத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் அட்டஹுல்லா கொக்யானி தெரிவித்துள்ளார். #Afghanistan #TalibanAttack

SCROLL FOR NEXT