விபத்து 
செய்திகள்

வெளிநாட்டில் நடந்த விபத்தில் குமரி என்ஜினீயர் பலி

வெளிநாட்டில் நடந்த விபத்தில் குமரி என்ஜினீயர் பலியானார். இன்னும் ஓரிரு நாளில் என்ஜினீயரின் உடல் விமானம் மூலம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

மாலை மலர்

களியக்காவிளை:

களியக்காவிளையை அடுத்த குளப்புறம் கீழ்பிலாம்பாட்டுவிளையை சேர்ந்தவர் பெலிக்ஸ் ஜெயதாஸ் (வயது 39). இவருடைய மனைவி பிரின்ஸ் டேனியல் (35). ரிக்சன் என்ற மகன் உள்ளார். என்ஜினீயரான இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அங்கு நடந்து சென்றபோது ஒரு விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி குடும்பத்தினர் மஸ்கட் தூதரக உதவியை நாடியுள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் என்ஜினீயரின் உடல் விமானம் மூலம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.