செய்திகள்

மதுரை அருகே சாலை விபத்து - 2 பேர் உயிரிழப்பு

மதுரை அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுரை மாவட்டம், எர்ரம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் அழகு சுரேஷ் (வயது 35). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அலங்காநல்லூர்-மதுரை மெயின் ரோட்டில் சென்றார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகு சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக அழகு சுரேஷ் மனைவி ரேணுகா தேவி கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்...

மதுரை துவரிமான் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பு (65). இவர் சம்பவத்தன்று இரவு திண்டுக்கல்-திருமங்கலம் 4 வழிச்சாலையில் நடந்து சென்றார்.

அப்போது துவரிமான் கண்மாய் அருகே கருப்பு சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக கருப்புவின் உறவினர் குமரவேல் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.