கொள்ளை (மாதிரி படம்) 
செய்திகள்

ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் அருகே போட்டோ ஸ்டூடியோவில் ரூ.1 லட்சம் கொள்ளை

ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் அருகே போட்டோ ஸ்டூடியோவில் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் அருகே போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருபவர் ராகாமுகமது.

நேற்று இரவு அவர் கடையை மூடிவிட்டு சென்றார். இன்று அதிகாலை அவர் தனது கடையின் வழியாக நடைபயிற்சி சென்றார்.

அப்போது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கடை திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த விலை உயர்ந்த டிஜிட்டல் கேமரா, 10 சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆர்.கே.நகர் போலீஸ் நிலையம் அருகே போட்டோ ஸ்டூடியோவில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT