செய்திகள்

கிறிஸ்தவ மக்களுக்கு ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள டி.டி.வி. தினகரன் அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இறுதி முடிவுகளின்படி குக்கர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகளை இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த வெற்றிபெற்ற களிப்புடன் ’தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT