பெங்களூர்:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும் தினகரனும் ஓரங்கட்டப்பட்டனர். அதன்பிறகு இரட்டை இலை திரும்ப கிடைத்த நிலையில் அ.தி.மு.க. குறித்த மக்களின் மனநிலை என்ன? யாருக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இதற்கான விடையை தெரிந்துகொள்ள ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வ கட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போட்டியிட்டாலும் தினகரன் போட்டியிட்டதை அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் தேர்தல் முடிவு தினகரனுக்கு சாதகமாக அமைந்தது. இதன் மூலம் மக்களும், தொண்டர்களும் தினகரனுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்.
தினகரன் முன்னிலையில் இருப்பதை சிறை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டார். தொடர்ந்து அவர் வெற்றிமுகத்தில் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.