சென்னை:
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து இறுதிகட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் காமராஜ் தேர்தல் பொறுப்பாளராக உள்ள பூண்டி தங்கம்மாள் தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு, அசோக் நகர், தனபால் நகர், பொன்னுசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு இறுதி கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர், தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் அண்ணன் மதுசூதனன், அமைச்சர் பதவியில் இருந்த போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு அம்மாவால் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். அம்மாவின் உண்மை விசுவாசியான அவரது பணிகள் தொகுதி மக்களுக்கு தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.