செய்திகள்

தண்டையார்பேட்டை பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி தீவிர ஓட்டுவேட்டை

ஆர்.கே.நகர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஏ.சி.சத்திய மூர்த்தி தண்டையார்பேட்டை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஏ.சி.சத்திய மூர்த்தி 43வது வட்டம் தண்டையார்பேட்டை ஆதிதிராவிடர் தெரு, ஜீவரத் தினம் சாலை, திடீர்நகர், காசிபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, 1935-க்கு முன்பு வெறும் 15 சதவீத மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. பட்டா வைத்திருப்பவர், பட்டதாரி, வரி செலுத்துவோர் என்ற தகுதியுடையோருக்கே வாக்குரிமை இருந்தது. மீத முள்ள 85 சதவீத மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை கோரினார். 1930, 1931 முதலாவது மற்றும் இரண்டாவது வட்ட மேசை மாநாடுகளில் வாக்குரிமை கேட்டு வாதம் செய்தார்.

1937-ல் நடந்த பொது தேர்தலில் ஏழை, மக்களும் வாக்களித்து மகிழ்ந்தனர். அனைவருக்கும் வாக்குரிமை வந்த பின்புதான் கருணாநிதி’, ஜெயலலிதா போன்றவர்களால் முதல்-அமைச்சராக ஆக முடிந்தது. இன்று மிட்டா மிராசுகள் ஏழைகளை பார்த்து வணங்குவதும், வாக்குகளை பெற காலில் கூட விழுவதும் நடைக்கிறது. நம்முடைய சரியான பிரதிநிதியை சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அனுப்பி நமது கல்வி, பொருளாதாரம், ஆகியவற்றை பாதுகாத்திட வேண்டும் என்று வாக்காளர்களிடம் வேட்பாளர் சத்திய மூர்த்தி விளக்கி கூறினார்.