செய்திகள்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மற்றொரு பிரமாண்ட பேரணி நடத்தப்படும்: லாலு பிரசாத் யாதவ்

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்து பீகாரில் விரைவில் மற்றொரு பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாட்னா:

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்து பீகாரில் விரைவில் மற்றொரு பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக இருந்து வரும் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கண்டித்து விரைவில் மற்றொரு பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதுதொடர்பாக, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளுடன் பேசி வருகிறோம். விரைவில் பிரமாண்ட பேரணி நடத்தும் நாள் மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டதும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பீகாரில் காந்தி மைதானத்தில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT