ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கற்பழித்து எரித்துக் கொலை, உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கற்பழிக்கப்பட்ட ஒரு இளம்பெண் நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல போகும் வழியில் தடுத்து நிறுத்தி, எரித்துக் கொலை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் செய்திகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இந்நிலையில், ஆண்டுதோறும் டிசம்பர் 9-ம் தேதியை தனது பிறந்தநாளாக குடும்பத்தார் மற்றும் கட்சியினருடன் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி(73) இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என அறிவித்துள்ளதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை நிலைய நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.