கைது 
செய்திகள்

வாலிபரை பீர்பாட்டிலால் குத்தியவர் கைது

ரிஷிவந்தியம் அருகே வாலிபரை பீர்பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் காலனியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 33). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த வீரன் (25) என்பவரும் நேற்று முன்தினம் ஒன்றாக சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தான் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து வீரன் வயிற்றில் குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த வீரன் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.