கோப்புப்படம் 
செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்ட விசாரணை முடிய ஓராண்டு ஆகும்- ஆணைய நீதிபதி தகவல்

ஜல்லிக்கட்டு போராட்ட விசாரணை முடிய இன்னும் ஓராண்டாகும் என விசாரணை ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மதுரை:

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

மதுரையில் 3-வது கட்டமாக விசாரணை நடந்தது. இதன் இறுதி நாளில் நீதிபதி ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் 951 பேரிடம் விசாரணை நடத்த முதலில் முடிவு செய்திருந்தோம். அது தற்போது 1002 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 200 பேரிடம் தான் இதுவரை விசாரணை முடிந்துள்ளது.

எனவே விசாரணை முடிய இன்னும் ஓராண்டு காலம் ஆகலாம். மதுரையில் 4-வது கட்ட விசாரணை ஏப்ரல் 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

SCROLL FOR NEXT