செய்திகள்

போலி முகவரி கொடுத்து 33 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றியவர்

போலி முகவரி கொடுத்து ராணுவத்தில் சேர்ந்து 33 ஆண்டுகளாக பணியாற்றி, 2 ஆண்டுகள் பென்சன் பெற்று ராணுவத்தை ஏமாற்றி நபரை போலீசார் அடையாளம் கண்டனர்.

மாலை மலர்

முஷாபர்நகர்:

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் மாவட்டம் நிராலி கிராமத்தை சேர்ந்த ஒருவர் போலி முகவரி கொடுத்து ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அவர் ராணுவத்தில் கடந்த 33 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு பணி ஓய்வு பெற்றார். தற்போது அவர் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ வீரருக்கான பென்சனும் பெற்று வந்தார்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நேற்று அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மற்றொருவரின் பெயரை பயன்படுத்தி, அதற்கான போலி முகவரி கொடுத்து ராணுவத்தில் சேர்ந்து 33 ஆண்டுகளாக பணியாற்றியதும் 2 ஆண்டுகள் பென்சன் பெற்று ராணுவத்தை ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் ஒருவர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு மூலம் 35 ஆண்டுகளாக அவர் ராணுவத்தை ஏமாற்றி வந்து இருப்பது அம்பலமாகி உள்ளது.