செய்திகள்

மகாராஷ்டிரா: முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் மெலகியான் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திர பண்டிட் சோனவனே. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர் 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் வெகுநாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அவரது வீட்டில் திடீரென துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டுள்ளது. ராணுவ வீரரின் மனைவி அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது ரவீந்திர பண்டிட் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் தனது துப்பாகியால் சுட்டு கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னாள் ராணுவ வீரரின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.