தேனி:
குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மீட்கப்பட்டவர்கள் விவரங்களை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட பலர் சிக்கினர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மீட்கப்பட்டவர்கள் விவரங்களை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்டுள்ளவர்களில் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது விவரம் வருமாறு:
திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் (29), சாதனா (11), பாவனா (12), ஈரோட்டை சேர்ந்த நேகா (9), சென்னையை சேர்ந்த பூஜா (27), சஹானா (20), மோனிஷா (30), நிவேதிதா (23), விஜயலட்சுமி (22) ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். #TheniForestFire #குரங்கணிதீ #tamilnews