செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் கடத்தப்படவில்லை, பாதுகாப்பாக இருக்கிறார்- பாதுகாப்பு அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் பொய் என்றும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. #ArmySoldierAbduction #DefenceMinistry

மாலை மலர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், அதன்பின்னர் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது உள்ளிட்ட சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.  

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பத்காம் மாவட்டம், சதூரா அருகே உள்ள காஜிபோரா கிராமத்தில் இருந்து ராணுவ வீரர் முகமது யாசின் என்பவரை அவரது வீட்டிலிருந்து பயங்கரவாதிகள் நேற்று மாலை கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ வீரர் முகமது யாசின் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என்றும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. #ArmySoldierAbduction #DefenceMinistry