தூய்மை பணியாளர்களுக்கு உதவி பொருட்களை ஒன்றிய அதிமுக செயலாளர் டிஎன்டி நடேசன் வங்கினார். 
செய்திகள்

லால்குடியில் அதிமுக சார்பில் துய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அ.தி.மு.க. கட்சி சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கினர்.

மாலை மலர்

லால்குடி:

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அதிகளவில் இருந்து வருகிறது. இந்த செயலை ஊக்குவிக்கும் வகையில் லால்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு பொன்னாடை போத்தியும், அரிசி, காய்கறிகள், முட்டை, மளிகை பொருட்கள், சோப்பு என அ.தி.மு.க. திருச்சி புறநகர் மாவட்டக் கழக செயலாளர் டி.ரத்தினவேல் சொந்த செலவில் அவரது சார்பில் லால்குடி பேரூராட்சி செயல் அலுவலர் நாளாயினி முன்னிலையில் லால்குடி ஒன்றிய செயலாளர் டி.என்.டி.நடேசன், நகர செயலாளர் பொன்னிசேகர் உள்ளிட்டோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகர துணைச் செயலாளர் மோகன், நகர பொருளாளர் மோமின் பாய், எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ஆச்சி முத்து, ஊராட்சி கழக செயலாளர் முத்துசுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.