அனில் அம்பானி 
செய்திகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்பட 5 இயக்குனர்கள் இன்று பதவி விலகினர்.

மாலை மலர்

புதுடெல்லி:

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக அனில் அம்பானி இருந்து வருகிறார். மேலும், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் இருந்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.

இதற்கிடையே, நடப்பு நிதியாண்டிற்கான 2வது காலாண்டில் ரூ.30 ஆயிரத்து 158 கோடியாக இழப்பு உயர்ந்து உள்ளது. இதுதொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்பட 5 பேரும் இன்று விலகியுள்ளனர்.

கடந்த அக்டோபரில் இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குனர் பொறுப்பில் இருந்து வி. மணிகண்டன் விலகியது குறிப்பிடத்தக்கது.