பாகூர்:
பாகூரை அடுத்த இருளன் சந்தை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி ஆஷாமணி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த ரவுடியான அசோக்குமார் (வயது 29) என்பவர் அண்ணாமலையின் மகளை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார்.
மேலும் அண்ணாமலையின் வீட்டுக்கு சென்ற அசோக்குமார் அவரது மகளை திருமணம் செய்து வைக்க கோரி வாய் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் அண்ணாமலை மற்றும் அவரது மனைவியை கத்தியால் தாக்கினார். இதில் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அண்ணாமலையின் வீட்டுக்கு வினோத்குமார் தீவைத்தார். இதில், அருகில் இருந்த சொர்ப்பராணி என்பவரது வீட்டுக்கும் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வினோத்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தலைமை நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டார். ஏற்கனவே வினோத்குமார் மீது 2017-ம் ஆண்டு குடியிருப்பு பாளையம் பகுதியை சேர்ந்த சுவேதன் என்ற மாணவனை கொலை செய்தது உள்பட பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.