செய்திகள்

செங்குன்றத்தில் மணல் கடத்திய 13 லாரிகள் பறிமுதல்

செங்குன்றம் அருகே உள்ள ஆரோன் உல்லாசநகர் பகுதியில் மணல் கடத்திய 13 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செங்குன்றம்:

செங்குன்றம் அருகே உள்ள ஆரோன் உல்லாசநகர் பகுதியில் ஆந்திர மணலை கடத்தி பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோட்டாட்சியர் அரவிந்தன், தாசில்தார் ரமேஷ், போலீஸ் உதவி கமி‌ஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சுரேந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனர்.

அப்போது லாரிகளில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணலை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

சென்னை பதிவு எண்களை கொண்ட 10 லாரிகளும், ஆந்திர பதிவு எண் கொண்ட 3 லாரிகளும் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 13 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 3 மண் அள்ளும் எந்திரங்களையும் கைப்பற்றினார்கள்.

ஆந்திராவில் கடத்தி கொண்டு வரப்பட்டு அங்கு கொட்டப்பட்டு இருந்த 100 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.