சென்னைக்கு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை உள்ள பெட்டி 
செய்திகள்

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தது

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட, நடராஜர் சிலை விரைவு ரெயில் மூலம் சென்னை வந்தடைந்தது. இந்த சிலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலை மலர்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி கோவிலில் இருந்து, 1982ம் ஆண்டு ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது.

இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.30 கோடி இருக்கும். இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினரின் நடவடிக்கை காரணமாக,  700 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக நடராஜர் சிலை மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.  பின்னர் விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு 13ம் தேதி (இன்று)  நடராஜர் சிலை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் சிலையை ஒப்படைத்து, உரிய சட்ட நடவடிக்கைக்குப்பின் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.