கோப்புப்படம் 
செய்திகள்

ஜம்முவில் பஸ் நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் கண்டுபிடிப்பு

ஜம்முவில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ஒரு பஸ்நிலைய பகுதியில் நேற்று 7 கிலோ எடையுள்ள வெடிபொருள் கைப்பற்றப்பட்டது.

மாலை மலர்

ஜம்மு:

2 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 14-ந் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் 2-ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும் வேளையில், ஜம்முவில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள ஒரு பஸ்நிலைய பகுதியில் நேற்று 7 கிலோ எடையுள்ள வெடிபொருள் கைப்பற்றப்பட்டது.

2019 புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் ஒரு கொடூர தாக்குதலுக்கு திட்டமிட்டு இந்த வெடிபொருள் பொதுமக்கள் கூடும் இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது. ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இந்த வெடிபொருள் கைப்பற்றப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பின்னணியாக செயல்பட்ட 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.