செய்திகள்

மாற்றுதிறனாளிகளுக்கு 5 சதவீதத்திற்குள் வரி விதிக்க பரிந்துரை: அமைச்சர் ஜெயக்குமார்

மாற்றுதிறனாளிகளுக்கு 5 சதவீதத்திற்குள் வரி விதிக்க தமிழகம் சார்பில் பரிந்துரை செய்துள்ளதாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

சரக்கு மற்றும் சேவை வரி வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலாக உள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் குழு இன்று கூடியது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 17-வது கூட்டமாகும். 

புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

பிராண்டட் உணவு உள்ளிட்டவைகளுக்கு வரி குறைக்க தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு 5 சதவீதத்திற்குள் வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளோம். அதேபோல், கையால் செய்யப்பட்ட நகைகளுக்கு வரி குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நீடிப்பது குறித்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும், ஸ்டாலின் அல்ல என்று கூறினார்.