குர்தா-வேட்டி 
செய்திகள்

பொருளாதார மந்தநிலை இருந்தால் நாம் வேட்டியும் குர்தாவும் அணிந்திருப்போம் - பாஜக எம்.பி

இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டிருந்தால், மக்கள் கோட்சூட் மற்றும் மேற்கத்திய ஆடைகளை அணிந்திருக்க மாட்டார்கள் என பாஜக எம்.பி. வீரேந்திர சிங் கூறியுள்ளார்.

மாலை மலர்

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர சிங் மாஸ்ட். பாஜகவை சேர்ந்த இவர் பாலியா தொகுதியின் எம்.பியும் ஆவார். இவர் நேற்று இரவு அப்பகுதியில் நடைபெற்ற ஆசிரியர்களை சிறப்பிக்கும் ஒரு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

ஆசிரியர்கள் நாட்டை உருவாக்குகிறார்கள். திறமை இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மெருகேற்றுகிறார்கள். கல்வியை வியாபாரமாக்கும் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. 

பொருளாதார மந்தநிலை குறித்து டெல்லி மற்றும் உலகின் மற்ற நாடுகளிலும் விவாதங்கள் நடந்துள்ளன. அவ்வாறு ஏதேனும் மந்தநிலை ஏற்பட்டிருந்தால், கோட்டுகள் மற்றும் மேற்கத்திய ஆடைகள் அல்ல, 'குர்தா (வட மாநிலத்தவர் அணியும் சட்டை) மற்றும் வேட்டியை அணிந்து இங்கு வந்திருப்போம். மந்தநிலை ஏற்பட்டிருந்தால் நாம் துணி, பேன்ட் மற்றும் பைஜாமாக்களை வாங்கியிருக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்...