போலீசார் விசாரணை 
செய்திகள்

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை

மதுரையில் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை கருப்பாயூரணி குருவம்மாள் நகரைச் சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது77). இவரது மகன் அசோக்குமார் (47). ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அசோக்குமார் இதுவரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அசோக்குமார் பற்றி எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

எனவே அவர் தொழில் போட்டியில் கடத்தப்பட்டாரா? அல்லது அவரது கதி என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கருப்பாயூரணி போலீசில் ராம்தாஸ் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான அசோக்குமார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.