மும்பை:
வங்கி அல்லாத 5 நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. திருப்தி பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்(குஜராத்), லிசா டை-அப் பிரைவேட் லிமிடெட்(தற்போதைய பெயர் டோர்சா பின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட், கொல்கத்தா), மோகா பைனான்ஸ் லிமிடெட்(பஞ்சாப்), குஜராத் பைனான்சியல் அண்ட் கேபிட்டல் லிமிடெட் (குஜராத்) மற்றும் சிங் பைனான்ஸ் லிமிடெட் (ஜம்மு) ஆகிய நிறுவனங்களின் பதிவு சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த நிறுவனங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்ற பெயரில் எந்த ஒரு வர்த்தக பரிமாற்றமும் செய்ய முடியாது.
ரிசர்வ் வங்கி சட்டம் 45-1ஏ(6)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. சான்றிதழ்களை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை. #RBI #NBFCs