செய்திகள்

இந்தியா ஏ அணியின் கேப்டனாக ரவிசந்திரன் அஷ்வின் நியமனம்

தியோதர் கோப்பை தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக முன்னணி சுழல்பந்து வீச்சாளர் அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். #RavichandranAshwin #IndiaACaptain

மாலை மலர்

புதுடெல்லி:

தியோதர் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா ஏ அணியின் கேப்டனாக முன்னணி சுழல்பந்து வீச்சாளர் அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா பி அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை அணியில் விளையாடிய பிரித்வி ஷா, ஷுப்மான் கில் இருவருக்கும் இந்தியா ஏ அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஈரானி கோப்பை போட்டியில், ரஞ்சி கோப்பை சாம்பியன்களான விதர்பாவை எதிர்கொள்ள இருக்கும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக கருண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டி மார்ச் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

தியோதர் கோப்பை:

இந்தியா ஏ: அஷ்வின் (கேப்டன்), பிரித்வி ஷா, உன்முக்த் சந்த், அகாஷ்தீப் நாத், ஷுப்மான் கில், ரிக்கி பூய், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் (விக்கெட்கீப்பர்), குருணல் பாண்டியா, முகம்மது ஷமி, நவதீப் சைனி, பசில் தம்பி, குல்வந்த் கெஜ்ரோலியா, அமந்தீப் காரே, ரோஹித் ராயுடு.

இந்தியா பி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ருதுராஜ் கைக்வாத், அபிமன்யு ஈஸ்வரன், அன்கித் பவ்னே, மனோஜ் திவாரி, சித்தேஷ் லேட், கே.எஸ். பாரத் (விக்கெட்கீப்பர்), ஜெயந்த் யாதவ், தர்மேந்திரசின் ஜடேஜா, ஹனுமா விஹாரி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, ஹர்ஷல் படேல், உமேஷ் யாதவ், ரஜத் பட்டிதர்.

ஈரானி கோப்பை:

ரெஸ்ட் ஆப் இந்தியா: கருண் நாயர் (கேப்டன்), பிருத்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ஆர். சமர்த், மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, கே.எஸ். பாரத் (விக்கேட்கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ஷாபாஸ் நதீம், அன்மோல்பிரீத் சிங், சித்தார்த் கவுல், அன்கித் ராஜ்பூட், நவதீப் சைனி, அதித் ஷெத். #RavichandranAshwin #IndiaACaptain #DeodharTrophy #IraniCup