செய்திகள்

அதிவேகமாக 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஸ்வின் உலக சாதனை

நாக்பூர் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி அதிவேகமாக 300 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் உலக சாதனைப் படைத்துள்ளார்.

மாலை மலர்

இந்நிலையில் இந்தியா - இலங்கை இடையிலான நாக்பூர் டெஸ்ட் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் அஸ்வின் 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 99 இன்னிங்சில் பந்து வீசி 292 ரன்கள் வீழ்த்தியிருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தினால் அதிவேகமாக 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனைப் படைக்கும் வாய்ப்பு அஸ்வினுக்கு இருந்தது.

பேட்டிங் செய்வதற்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களிலும், 2-வது இன்னிங்சிலும் 166 ரன்களிலும் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் அஸ்வின் பந்து வீச்சுதான். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 54 டெஸ்டில் 101 இன்னிங்சில் 300 விக்கெட்டுக்கள் எடுத்ததன்மூலம், அதிகவேகமாக 300 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டென்னிஸ் லில்லீ 1981-ம் ஆண்டு 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுக்கள் வீ்ழ்த்தியிருந்தார். இதுதான் 36 வருட சாதனையாக இருந்தது. அதை தற்போது அஸ்வின் முறியடித்துள்ளார்.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில்  அஸ்வின் அறிமுகமானார். 7 முறை 10 விக்கெட்டுக்களும், 26 முறை ஐந்து விக்கெட்டுக்களும் வீழ்த்தி அஸ்வின் சாதனைப் படைத்துள்ளார்.