ரவிசங்கர் பிரசாத் 
செய்திகள்

பெகாசஸ் விவகாரத்தில் விவாதத்துக்கு தயார்: பாஜக உறுதி

காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பத்தின் நலன் பேணும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பிட்ட ரவிசங்கர் பிரசாத், ஒரு குடும்பத்தின் நலன் காக்கப்பட்டால் மட்டுமே பாராளுமன்றத்தை நடத்த விடும் எனவும் தெரிவித்தார்.

மாலை மலர்

பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா கடுமையாக குறை கூறியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பெகாசஸ், வேளாண் சட்டங்கள் என எந்த பிரச்சினைக்கும் அர்த்தமுள்ள விவாதத்துக்கு பா.ஜனதா தயாராக இருக்கிறது. பெகாசஸ் விவகாரத்தில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டிருந்தால், அப்போதே விவாதம் நடந்திருக்கும். ஆனால் அவர்கள் அறிக்கையை கிழித்து விட்டனர்’ என குற்றம் சாட்டினார்.